அறிவாளிகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை! இந்தியன் 2 விமர்சனங்கள் குறித்து பாபி சிம்ஹா!
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளியான 1 வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கும் இந்தியன் 2 படம் இதுவரை 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே படம் வெளியாவதற்கு முன்பே ப்ரோமோஷனின் போது சித்தார்த் படம் பற்றி பேசியது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. எதுவும் மாறவில்லை எவனும் திருந்தவில்லை இது தான் இந்தியன் படம் என அவர் பேசி இருந்தார்.
அதனை தொடர்ந்து பாபி சிம்ஹா பேசியுள்ளது மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்கள் சந்தித்து வருவது பற்றிய கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு தான் அவர் கூறிய பதில் ட்ரோல் ஆகி இருக்கிறது.
படம் வெளியானதை தொடர்ந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க பாபி சிம்ஹா வந்திருந்தார். அப்போது இந்தியன் 2 படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு இருக்கிறது அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்க்கு பதில் அளித்த பாபி சிம்ஹா ” இந்தியன் 2 படத்தினை பார்ப்பதற்கு மக்கள் எந்த அளவுக்கு கூட்டமாக வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்து கொண்டு இருப்பீர்கள்.
எனவே, அதனை மட்டும் தான் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அடுத்த வேலைகளை தொடங்கவேண்டும். விமர்சிக்கும் எல்லாருமே தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நல்லா இருக்கு என சொன்னால் நம்மை முட்டாள் என நினைத்துவிடுவார்களோ.. என எண்ணிக்கொண்டு சாக்கு சொல்லும் வகையில் ஏதோ ஒன்றை பேசி வருகிறார்கள். அந்த அறிவாளிகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை’ என கூறியுள்ளார்.
இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் வீக்கெண்ட் விருந்தாலி பாபி சிம்ஹா….. ஆட்டோல ஏத்துங்கையா எனவும், நீங்கள் பேசுவது ரொம்பவே நகைச்சுவையாக இருக்கிறது மீம் கிரி யேட்டர்களுக்கு கதை ரெடியாகிவிட்டது எனவும் கூறிவருகிறார்கள்.