13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி: வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க… இனி தான் ஆரம்பமே – இளையராஜா நெகிழ்ச்சி!

தமிழராக இருந்து இந்த சாதனை செய்துவிட்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றுள்ளனர்.

Ilaiyaraaja Symphony

சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று சென்னை திரும்பி உள்ளார். சிம்பொனின் இசைத்து விட்டு சென்னை வந்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா செய்தியளர்களிடம் பேசுகையில், “லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். லண்டனில் இசை கோர்ப்பாளர் நிகில் டாம்ஸ் சிறப்பாக நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தார். நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மொமண்ட்டிற்கும் கைதட்டி ரசிகர்கள் கொண்டாடினர் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும், அனைவரும் மனமார வாழ்த்தியதால் தான், நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது எனவும், அரசின் சார்பாக வரவேற்றது மகிழ்ச்சி என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியை 13 நாடுகளில் நடத்த தேதி குறிச்சாச்சு எனக் கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். 82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள். இது ஆரம்பம்தான்.

என்னை இசைக்கடவுள் என்றெல்லாம் ரசிகர்கள் சொல்வதை கேட்கும்போது, ‘இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களேப் பா’ என்றுதான் எனக்குத் தோன்றும். நான் சாதாரண மனிதனைப் போலத்தான் வேலை செய்கிறேன், என்னைப் பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது.

சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள், அதனை நேரில் உணர வேண்டும். நம்மண்ணிலும் நடக்கும் அதுவரை காத்திருக்கவும். சிம்பொனி நிகழ்ச்சியை யாரும் டவுன்லோடு செய்து கேட்காதீர்கள். காரணம், நீங்கள் அதை நேரில் உணரும் போது அதன் அனுபவம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நம் நாட்டிலும் நிகழ்ச்சி நடைபெறும், மக்கள் அதுவரை காத்திருங்கள்” என்றார்.

தாய் மண்ணிற்கு பெருமை:

இதில் இளையராஜாவை வரவேற்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “நம் அனைவரின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா. தனது இசையின் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஆசிய கண்டத்திற்கே மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளார்” என புகழாரம் சூட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்