கத்தாத…மைக்கை போட்டுட்டு போயிட்டே இருப்பேன்… மேடையில் கடுப்பான இளையராஜா.!
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது “விடுதலை” எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில், சூரி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய இளையராஜா ” விடுதலை படத்தின் இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. 1500 படங்களில் பணிபுரிந்துள்ளேன், 1500 இயக்குனர்களுடன் பணி புரிந்துள்ளேன். நான் சொல்கிறேன், இதுவரை நீங்கள் கேட்காத இசையை இந்த படத்தில் கேட்பீர்கள்.
பிறகு அரங்கில் இருந்த ரசிகர்கள் சற்று கூச்சலிட தொடங்கியவுடன் இளையராஜா சற்று கடுப்பாகி கத்தாத…மைக்கை போட்டுட்டு போயிட்டே இருப்பேன் என கூற பின்னாடி இருந்த வெற்றிமாறன் தனது கையை அசைத்து ரசிகர்களை அமைதியாக இருக்க கூறினார். பிறகு பேசிய இளையராஜா ” விடுதலை படம் தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத களத்தில் அமைந்த படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.