வாயிலேயே வடை சுட கூடாது தம்பி! தனுஷை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்!

சென்னை : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் வதந்தியான சில சர்ச்சைகளில் சிக்குவது சாதாரணம் தான். அப்படி தான் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் சொல்லவேண்டும் என்றால் அவர் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது அதைப்போல, ஒரு படத்தை முடித்து கொடுக்காமல் அடுத்ததாக தன்னுடைய படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியது என விஷயங்களில் சர்ச்சையை எதிர்கொண்டார்.
இதில், போயஸ் கார்டனில் வீடு வாங்கியது பற்றி சிறிய கதை ஒன்றை ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசி விளக்கம் அளித்தார். இருப்பினும், தனுஷ் ஏற்கனவே, நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் தொகையை வாங்கி வந்தார்.
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்களிடம் நடிகர் தனுஷ் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தனுஷை பலரும் ட்ரோல் செய்ய தொடங்கினார்கள் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில், இந்த விஷயத்தை வைத்து பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்தில் தனுஷை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஊரு முழுக்க எல்லார்கிட்டயும் அட்வான்ஸ் வாங்கி கொண்டு அதில் வீடு கட்டிவிட்டு தனுஷ் நல்ல வாயாலே வடைசுடுகிறார். தயாரிப்பாளர்களுக்கு அவர் செய்ய வேண்டிய முதல் விஷயம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கமிட் ஆகி உள்ள அணைத்து படங்களும் நடித்து கொடுக்கவேண்டும்.
அட்வான்ஸ் வாங்கி கொண்டு அவர்களுக்கு சீக்கிரம் படம் நடித்து கொடுக்காமல் இருந்து கஷ்டபடுத்த கூடாது. இதனை விட்டு விட்டு வாயில் வடை சுடுவதெல்லாம் ஆகாது தம்பி. இந்த விஷயத்திற்கு பதில் மட்டும் சொன்னால் போதுமா? நியாயம் ரொம்பவே முக்கியம் எங்கே படத்திற்காக அட்வான்ஸ் வாங்கினீங்களோ அவர்களுடைய படத்தை முடித்து கொடு” எனவும் கே.ராஜன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025