நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த 19-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். மேலும், இவர் மாரடைப்பு காரணமாக தான் காலமானார். ஆனால், சில யூடியூப் சேனல்களில் தெரியாமல் தவறான செய்திகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் மயில்சாமியின் மகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தந்தை இறப்பு குறித்து என்ன நடந்தது என உண்மை தகவலை பற்றி பேசி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய மயில்சாமியின் மகன் ” அப்பா முதலில் ஒரு படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தவுடன் கோவிலுக்கு செல்லலாமா..? என்று சிவராத்திரி அன்று கேட்டார் நாங்களும் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு முதலில் சென்றோம்.
செல்லும் வழியில் 7 மணிக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு தான் சென்றோம். சரியாக 8 மணிக்கு கோவிலிக்குள் வந்துவிட்டோம். பிறகு அப்பா சிவமணிக்கு போன் செய்து சிவன் கோவிலுக்கு வர சொன்னார். சிவமணி சாரும் 11 மணிக்கு கோவிலுக்கு வந்தார். கோவில் இசை கச்சேரி நடந்துகொண்டு இருந்தது. பிறகு 2 மணிக்கு அப்பா வேறு கோவிலிக்கு போவோமா என்று கேட்டார்.
அதற்கு சிவமணி சார் வேண்டாம் நீங்கள் வீட்டிற்கு சென்று தூங்குங்கள் என்று கூறினார். ஏனென்றால், அப்பா இதய நோயாளி எனவே தான் அப்படி சொன்னார். வீட்டிற்கு வந்த பிறகு சாப்பிட்டார். சாப்பிட்ட பிறகு தூங்குவதற்காக நான் வீட்டின் மாடிக்கு சென்றுவிட்டேன். பிறகு அம்மா கீழே என்னை அழைத்து அப்பாக்கு மூச்சி விட கஷ்டமாக இருப்பதாக சொன்னார். நான் அப்பாவிடம் சென்று பேசினேன்.
உடனே அப்பா என்னால் முடியவில்லை மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னார். எனவே நான் காரில் அவரை அழைத்து பக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது அங்கு கொண்டு சென்றேன். செல்லும் வழியிலே என் மீது அவர் சாய்ந்துவிட்டார். பிறகு மருத்துவமனையில் அப்பா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இது தான் நடந்தது.
சில யூடியூப் சேனல்களில் இஷ்டத்துக்கு ஒண்ணுமே தெரியாமல் செய்திகளை போடுகிறார்கள். அதை பார்க்கும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. எனவே இது தான் உண்மை இஷ்டத்துக்கு போடாதீங்க” என கூறியுள்ளார் மயில்சாமியின் மகன். மேலும் பேசிய அவர் ” அப்பா இருக்கும் போது பணம் சேர்ப்பது பெரிய விஷயம் இல்லை மக்களை சேர்க்கவேண்டும் என்று. அவர் நிறைய மக்களை சேர்த்திருக்கிறார். அவருக்காக கடைசி நிமிடம் வர நின்ற அனைவருக்குமே நன்றி” என கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…