ஐந்து கோடி கொடுத்தாலும் வேண்டாம்! பெரிய ஹீரோ படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா?

anushka shetty

அனுஷ்கா : ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட ரசிகர்கள் அப்படியே இருப்பார்கள். அந்த வகையில், அதில் நடிகை அனுஷ்காவும் ஒருவர் என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கடந்த சில வருடங்களாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தின் மூலம் ஹிட் கொடுத்து இருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்த்தில் இரண்டு நடித்து வருகிறார். இவை இரண்டும் சற்று வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் என கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு நடிகை அனுஷ்காவுக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். படத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் தருகிறோம் என்றும் கூறினார்களாம். ஆனால், படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறி அனுஷ்கா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால், அந்த சமயம் இனிமேல் நடித்தால் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை கேட்டு மட்டுமே நடிக்கவேண்டும் என்கிற முடிவில் இருந்தாராம். அதன் காரணமாக தான் 5 கோடி கொடுத்தும் அந்த தெலுங்கு ஹீரோக்கு ஜோடியாக நடிக்கவும் மறுத்துவிட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், நடித்தால் விருப்பமான கதாபாத்திரம் கொண்ட படத்தில் நடிப்பேன் என்ற முடிவில் அனுஷ்கா இருப்பது தெரியவந்துள்ளது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA