lokesh leo [File Image]
லியோ படம் வரும் 19ம் தேதி வெளியாவுள்ள நிலையில், படம் தொடர்பாக லோகேஷ் ஒரு சுவாரசிய தகவலை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரச வெளியிட்டுள்ள அரசாணையின்படி, காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சி தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1:30க்குள் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#LeoFDFS: லியோவுக்கு 4 மணி சிறப்பு காட்சி கிடையாது! வெளியானது புதிய அதிரடி அறிவிப்பு!
இன்னும் எண்ணி அடுத்த ஐந்தாவது நாளில் ரிலீஸாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறு விறுப்பாகவும், மும்மரமாகவும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல தனியார் சினிமா ஊடங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அந்த பேட்டியில் லியோ திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை வழங்கி விட, அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது இணையத்தில் கலக்கி வரும் ஒரு வீடியோவில் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அதாவது, இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசுகையில், லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விட்டுவிடாதீர்கள், எப்படியாவது படம் போடுவதற்கு முன்பு தியேட்டர் சென்றுவிடுங்கள். கடந்த அக்டொபர் முதல் இந்த அக்டொபர் வரை அந்த 10 நிமிடத்திற்கா கடுமையாக 1000க்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளோம். இதெல்லாம் உங்களுக்காக தான் ‘Go Sit Calm And Enjoy’ பார்வையாளர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என்று கூறியுள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் குஷியில் உள்ளனர்.
Leo Fourth Single: அக்டோபர் 16ம் தேதி சம்பவம் உறுதி.! ‘லியோ’வின் 4வது சிங்கிள் அப்டேட்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பார்க்க ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…