இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை எனக்கு வேண்டாம் – நடிகர் அருள்தாஸ்
இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை எனக்கு வேண்டாம் என நடிகர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதனால் சினிமா படப்பிடிப்புகள், ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும், இவர்களுக்கு உதவும் வகையில் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனை, தொடர்ந்து நடிகர் அருள்தாஸ்அவர்கள், இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை, நான் புதிதாக நடிக்கும் படங்களுக்கு சம்பளம் வேண்டாம் என அறிவித்துள்ளார்.