மலையாள நடிகர் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்து இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படமே “ஏழு கடல் ஏழு மலை” இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இவர் நடிகர் சிம்பு மட்டும் SJ சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு படத்தை தயாரித்தவர் ஆவர்.
“ப்ளூ ஸ்டார் படம் வெளிவரக்கூடாது” சென்சார் மீது பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..!
தற்போது ஏழு கடல் ஏழு மலை படக்குழுவினர் நெதர்லாந்தில் நடைபெற்ற ரொட்டர்டாம் ( Rotterdam ) எனப்படும் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். இந்த திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படமான இந்த படமும் திரையிடப்பட்டது. இதனால் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவர்களுடன் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களும் கலந்தது கொண்டார்.
இந்த படம் திரைபடம் வெளியானதை குறித்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் பேட்டி அளித்தனர். அதில் நடிகர் சூரி, மலையாள நடிகர் நிவின் பாலி, நடிகை அஞ்சலி மற்றும் இயக்குனர் ராம் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
நடிகர் சூரி கூறுகையில் :-
“எல்லாருக்கும் வணக்கம், சர்வேதச திரைப்பட விழாவான ரோட்டர்டாம்-ல் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் தேர்வு செய்து இங்க ஒளிபரப்ப பட்டிருக்கிறது. ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இதுவே எனக்கு முதல் அனுபவம் அதற்கு என்னோட டைரக்டர் ராம் அவர்களுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
மேலும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்..இங்க உள்ள அனைத்து மக்களும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருக்காங்க. தமிழ் சினிமாவுக்கு ஒரு தனி மரியாதை தருவதை இந்த மாதிரி விழாவில் கலந்து கொள்ளும் போதுதான் தெரிகிறது. கண்டிப்பா இந்த படம் உலகில் திரையிட படும் எல்லா இடத்திலும் நன்றாக வெற்றி அடையும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
மலையாள நடிகர் நிவின் பாலி கூறுகையில் :-
“நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் இந்த மாதிரி பெரிய திரைப்பட விழாவில் எனது படமும் ஒளிப்பரப்பட்டது என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்கு இருக்கின்ற திரைப்பட பிரியர்கள் படத்தை பார்த்தவுடன் அவர்களுக்கு பிடித்துள்ளது என்று கூறி வரவேற்கின்றனர். எனது படக்குழு அனைவருக்கும் நன்றிகளை இந்த நேரத்தில் கூறுகிறேன்” என்றார்.
இயக்குனர் ராம் கூறுகையில் :-
ரொம்ப வருடங்களாக நடந்து கொண்டிருக்கிற ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு ஏழு கடல் ஏழு மலை திரை படம் வெளியாகி உள்ளது. இங்க இருக்குற எல்லா திரைப்பட ரசிகர்களும் மிகவும் ரசித்து படத்தை பார்த்தனர். இந்த திரைபடம் இது மாதிரி பெரிய திரைப்பட திருவிழாவில் வெளியானதால் இதை மிகவும் சீரியஸ்- ஆன படம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படம் (commercial film ). அதற்கு உத்தரவாதம் இந்த 3 பேர் தான் (நிவின், சூரி, அஞ்சலியை காண்பித்தார்). இந்த திரைப்படத்தில் என்னுடன் உழைத்த படக்குழுவினர் எல்லாருக்கும் நன்றி” என கூறினார்.
நடிகை அஞ்சலி கூறுகையில் : –
“எல்லாருக்கும் வணக்கம், நான் ரோட்டர்டாமின் முதல் திரைப்பட விழாவில் கலந்தது கொள்கிறேன். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த தருணம் மிகவும் பெருமையாக உள்ளது. இன்று ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் இங்க ரிலீஸ் ஆன மாதிரி விரைவில் தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகும் எல்லாரும் பார்த்து மகிழ்ச்சியை அடையுங்கள்” என கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…