இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை! தளபதி 65 குறித்து பிராண இயக்குனர் விளக்கம்!
தளபதி விஜய் பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15-ம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், இப்படத்தினை தொடர்ந்து தளபதி 65 திரைப்படம் குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், தளபதி 65 படத்தினை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, தான் தளபதி 65 படத்தை இயக்கவில்லை என்றும், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு, ‘இல்லை. இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை.’ என கூறியுள்ளார்.
Nooo!! ???? Idhu yaaru paatha vela nu therila ???????? https://t.co/sdpG6YwcSk
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) March 18, 2020