பாய்சன் கொடுத்து கொல்ல பாத்தாங்க…பொன்னம்பலம் கூறிய பகீர் தகவல்..!
90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் பொன்னம்பலம். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் சில நாட்களிலே வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையில், பொன்னம்பலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பாய்சன் கொடுத்து கொலை செய்ய பார்த்ததாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய ” என்னுடைய அப்பாவுக்கு 4 மனைவிகள். அதில், 3வது மனைவியின் மகன், என்னுடைய அண்ணனை மேனேஜராக வைத்திருந்தேன்.
ஆனால், அவர் ஒரு கட்டத்தில் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. அவரைவிட, நான் நன்றாக வளர்ந்ததே இதற்கு காரணம். ஆனால், அவரை மன்னித்து சேர்த்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பொன்னம்பலம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் என்றே கூறலாம்.பிறகு கடந்த 5 ஆண்டுகளாக பொன்னம்பலம்
சிறுநீரகங்கள் செயலிழந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்காக பல நடிகர்கள் பணம் கொடுத்து உதவி செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.