பிக் பாஸ் பிரதீப் பெயரில் பண மோசடி? பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் – பிரதீப் ஆண்டனி வேண்டுகோள்

pradeep antony Bigg Boss

பிக் பாஸ் தமிழ் 7-ல் இருந்து சக பெண் போட்டியாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. இதனை தொடர்ந்து, பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதெற்கு ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

மேலும், அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். அது மட்டும் இல்லாமல், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதற்கு முன்பு அவருடைய தரப்பு நியாத்தை கமல் கேட்காததால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனி, அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியீட்டு வரும் நிலையில் தற்பொழுது, தனது ரசிகர்களுக்கு உருக்கமாக பதிவிட்டுள்ளார். தனது பெயரில் பண மோசடி நடந்த விட கூடாது என்ற எண்ணத்தில் ரசிகர்களுக்கு வேண்டிக்கொள் வைத்திருக்கிறார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நான் ஏழையாக இருக்கலாம். அதற்காக பிறரிடம் பணம் கேட்கமாட்டேன் என் பெயரை கெடுக்க நினைக்கும் சிலர் என் பெயரை பயன்படுத்தி ‘crowd funding’ல் ஈடுபட நேர்ந்தால், அது நான் என நினைத்து பணம் கொடுக்க வேண்டாம். மேலும், பிக் பாஸ் வீட்டில் யாருடனும் எனக்கு பிரச்னை இல்லை” என கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு வெட்கப்படவில்லை என்றும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். ‘பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதில் நான் ஒரு நபராக விளையாட்டின் ஒவ்வொரு நிமிடமும் நேசித்தேன்.

யாரும் எதிர்பார்க்கல! பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய பிக் பாஸ்?

எனவே ஒரு வழியில், பிக்பாஸ் விதிகளின்படி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் விலைமதிப்பற்ற பெரியது ஒன்றை நான் வென்றது போல் உணர்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பிரதீப் ஆண்டனி

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, தற்போது நிகழ்ச்சியில் மூலம் மிக்பெரிய அளவில் பிரபமடைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested
Sahitya Akademi Award - venkatachalapathy