வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம்.! ரசிகர்களுக்கு அஜித் கூறிய அறிவுரை.!
நடிகர் அஜித்குமார் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு கூற விரும்பும் கருத்துக்கள் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். எந்த சமூக வலைதள பக்கங்களிலும் அவர் இல்லாமல் இருந்தால் கூட, எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன் ரசிகர்கள் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்ட செய்தியை அஜித் தரப்பில் இருந்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளபக்கங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காதுகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறி இருந்தார். இதனை தொடர்ந்து, இன்று ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில் “ பொறாமையோ, வெறுப்புணர்வோ, வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, உயர்ந்த இலக்குடன் செயல்பட வேண்டும்” என தனது ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022