“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

எதிர்நீச்சல் படத்திற்காக நயன்தாரா செய்த உதவி பற்றி தனுஷ் பேசிய பழைய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

nayanthara and dhanush

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள் . ஒன்றாக பணியாற்றியது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் என்பதைச் சொல்லியே தெரியவேண்டாம். அந்த சமயங்களில் நடந்த பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் செல்வது.

ஒருவருடைய படங்கள் வெளியானால் மாறி மாறி கால் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது என நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தார்கள். இந்த சூழலில், இருவருடைய நட்பில் பிளர்வு ஏற்படும் வகையில், நடந்த சம்பவம் திரைத்துறையில் பரபரப்பைக் கிளப்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Read More – “போலி முகமூடி அணியும் தனுஷ்”…நயன்தாரா அதிரடி குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

பிரச்சினைக்கு முக்கிய காரணமே, தனுஷ் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தன்னுடைய திருமண வீடியோவிற்கு பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்பது தான். இருப்பினும், உண்மையில் எதற்காக தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பது அவர் தரப்பிலிருந்து அளிக்கப்படும் விளக்கம் மூலம் தான் தெரியும்.

இந்த சூழலில், இவர்களுடைய பிரச்சினை சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தனுஷ் முன்னதாக நயன்தாரா பற்றிப் பேசிய விஷயங்களையும், நயன்தாரா தனுஷ் பற்றிப் பேசிய விஷயங்களையும் இணையவாசிகள் தோண்டி எடுத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அப்படி தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் தனுஷ் நயன்தாராவுடன் தனக்கு இருக்கும் நட்பு பற்றி பெருமையாகப் பேசினார். இது குறித்து அவர் பேசுகையில் “நயன்தாரா தான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நண்பர். எதிர்நீச்சல் படத்திற்காக நான் அவரிடம் பேசும்போது யோசிக்காமல் எங்களுக்காக வந்து அந்த பாடலில் நடனம் ஆடிக்கொடுத்தார். அந்த பாடலில் நடனம் ஆடியதற்குப் பணம் கூட அவர் வாங்கவில்லை.

நீங்கள் என்னுடைய நண்பர் நீங்கள் கேட்டதற்காக உங்களுக்காக நான் இந்த பாடலில் நடனம் ஆடிக்கொடுக்கிறேன்” என்று நயன்தாரா கூறியதாக தனுஷ் கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படி இருந்த நட்புக்குள்ளே இப்படி ஒரு பிரச்சினையா? எனக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
Donald Trump
MS Dhoni - Rohit Sharma - Rishabh pant
RG kar case culprit Sanjay Roy - WB CM Mamata Banerjee
Erode east last candidates list
Donald trump take oath as 47th US President
Morocco stray dogs shootout