இந்த மாதிரி கேவலமான வேலையை செய்யாதீங்க…செம கடுப்பில் அம்மு அபிராமி.!
தமிழில் பைரவா, அசுரன், ராட்சசன், யானை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.’
இந்நிலையில், அம்மு அபிராமி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தன்னை பற்றிய விவரங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் அவரது யூடியூப் சேனலின் லோகோவை அப்படியே காப்பி அடித்து போலியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கிஉள்ளார்.
இதையும் படியுங்களேன்- தமிழில் மட்டுமல்ல…இந்த வருடம் சைலன்ட் சம்பவம் செய்த டாப் 5 சின்ன பட்ஜெட் படங்கள்…!
இதனை பார்த்த பலரும் இது அம்மு அபிராமியின் உண்மையான சேனல் என பின் தொடர தொடங்கியுள்ளனர். அதில் பின் தொடர்ந்த ஒருவரிடம், தங்களுக்கு ஐபோன் ஒன்றி பரிசு கிடைத்துள்ளதாகவும், அதனை உங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றால் அதனுடைய டெலிவரி சார்ஜாகநீங்கள் ரூ.5,000 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிறகு இது பணமோசடி என தெரியவந்துள்ளது. இதனை பார்த்து சற்று ஷாக்கான அம்மு அபிராமி வீடியோ ஒன்றை வெளியீட்டு “என் பெயரில் நடந்த மோசடி குறித்து அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அடுத்தவர்களை ஏமாற்றும் கேவலமான வேலையை தயவுசெஞ்சி செய்யாதீர்கள். யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை ” விடுத்துள்ளார்.