தேசிங்கு ராஜா, கழுகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிந்து மாதவி கடந்த 2017-ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலாவது நமக்கு நல்ல பெயர் கிடைத்து நமக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என திட்டமிருந்தார்.
ஆனால், அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பெரிதளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைப்போல, சில நடிகைகள் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால், பிந்து மாதவி 37 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் சிறிய சிறிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை பிந்து மாதவிக்கு திருமணம் செய்து கொள்வதில் அக்கறை இல்லை எனவும், அதன் காரணமாக தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் எனவும் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தமிழும், தெலுங்கிலும் ஒரு காலத்தில் நடிகை பிந்து மாதவி கொடிகட்டி பறந்தார்.
அவர் எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அவர் நடிக்க கூடிய நல்ல நடிகை தான். அவருடைய கேட்ட நேரத்தால் அவருடைய படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. இதனால் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பட வாய்ப்புகளுக்காக வெளியீட்டு வருகிறார்.
பிந்து மாதவிக்கு வயது ஆகிவிட்ட போகிறது ஆனால், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்ற எந்த எண்ணமும் அவருக்கு இல்லை. இதன் காரணமாக தான் பிந்துமாதவி இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும் நடிகை பிந்து மாதவி கடைசியாக கழுகு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது பகைவனுக்கு அருள்வாய், யாருக்கும் அன்ஜெல் உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துள்ளார். இந்த படங்களுக்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…