காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்த நடிகர் சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்து அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் காமெடியை ஓரமாக வைத்துவிட்டு சீரிஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.
தொடர்ச்சியாக சூரி ஹீரோவாக படங்களில் நடித்து வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் மற்றோரு பக்கம் அவருடைய காமெடியை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள் என்றே சொல்லலாம். எனவே, நடிகர் சூரிக்கு இயக்குனர் வெற்றிமாறன் அட்வைஸ் ஒன்றையும் செய்துள்ளாராம். என்னவென்றால், தொடர்ச்சியாக இது போன்று ஹீரோவாக படங்களில் மட்டுமே நடித்து கொண்டு இருக்காதீங்க.
காமெடியான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நீங்கள் நடிக்கவேண்டும். ஒரு வருடத்தில் ஒரு படம் ஹீரோவாகவும், மற்றோரு படம் காமெடியான கதாபாத்திரங்களில் நடிங்கள் என்று கூறினாராம். பிறகு கருடன் படத்தை பார்த்துவிட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், மீண்டும் சூரியிடம் வெற்றிமாறன் ” வாய்ப்பு இல்லை சூரி ..இனிமேல் உங்களை யாரும் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க கூப்பிட மாட்டாங்க” என்று கூறினார்.
வெற்றிமாறன் சொன்னது போல தனக்கு கருடன் படத்தை தொடர்ந்து காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பே வரவில்லை எனவும் நடிகர் சூரி இந்த தகவலை தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், கருடன் படம் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த மே 31-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…