Vijay Antony Megha Akash [file image]
சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விஜய் ஆண்டனிக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி எப்போது தனது மனதிற்க்கு படும் விஷயங்களை வெளிப்படையாகவே சொல்லிவிடுவார்.
அந்த வகையில், சமீபத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு படத்தில் மேகா ஆகாஷ் தன்னுடன் நடிக்க மறுத்துவிட்டார் என்று விஜய் ஆண்டனி உண்மையை உடைத்துள்ளார். இது குறித்து பேசிய விஜய் ஆண்டனி ” இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே எனக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க மேகா ஆகாஷ்க்கு வாய்ப்பு கிடைத்து இருந்தது.
அந்த படம் பெயரை சொல்ல நான் இப்பொது விரும்பவில்லை. வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அவர் என்னுடைய படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அந்த படத்தில் அவர் என்னுடன் நடிப்பார் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் அவர் அந்த சமயம் மறுத்துவிட்டார். படம் பெயரை சொல்ல விரும்பவில்லை.
இருந்தாலும் நான் சொல்லும் இந்த தகவலை மனமுடைந்த விஜய் ஆண்டனி என்று எழுதி கொள்ளுங்கள் ” என நக்கலாக பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி ” இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக எங்கள் இருவருக்கும் அந்த அளவுக்கு பேச்சுவார்த்தை கிடையாது.
‘இந்த மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் மூலம் அவருக்கும் எனக்கும் பேசுவதற்கு பழகி கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இப்போது நண்பர்களாக மாறிவிட்டோம். இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பர் கிடைத்துள்ளார்” எனவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…