ஹாட் அப்டேட்.! கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு களமிறங்கும் ‘டான்’ சிவகார்த்திகேயன்.!?
கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு தொடங்கப்பட்டு விறுவிறுவென வளர்ந்து வரும் திரைப்படம் டான். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. லைகா பட நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
காலேஜ் பையனாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. வெளியான முதல் போஸ்டரிலும் அப்படிதான் தெரிகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் ஷூட்டிங் எடுக்கவேண்டி உள்ளதாம். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் வேலைகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
அதன்படி, வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படத்தின் ட்ரைலர் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இருக்கும் என கூறப்படுகிறது. அநேகமாக பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.