நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மதியொளி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த படம் வரும் ஜூன் 11-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனென்றால் படம் அந்த அளவிற்கு எமோஷனலாக ரசிகர்களின் மனதை தொட்டுவிட்டது.
இதனையடுத்து, இந்த படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 116 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் ஒரு கோடி வசூல் செய்தால் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் வசூல் சாதனையை முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் உலகம் முழுவதும் 117 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…