வாக்கிங் சென்ற டிவி நடிகையை சுற்றி வளைத்த நாய்கள்! படுகாயம் அடைந்த நடிகை!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியில் பிரபல டிவி நடிகையான ஆஞ்சல் குரானா, டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது செல்லப்பிராணியாக லியோவுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று தெருநாய்கள், அவரது செல்லப்பிராணியான லியோவை கடிப்பதற்கு வந்துள்ளனர்.
உடனே, லியோவை தூக்கினார் ஆஞ்சல். சுற்றி வளைத்த நாய்கள் அஞ்சலை இடது பக்க இடுப்பு மற்றும் வலது கால் மூட்டில் பலமாகக் கடித்துவிட்டன. சிறிது நேரத்தில் அவை ஓடியதை அடுத்து, மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்து கூறிய ஆஞ்சல், லாக் டவுன் காரணமாக சாலைகளில் யாருமில்லை. திடீரென்று தெரு நாய்கள் குரைத்தபடி ஓடிவந்தன. லியோவை தூக்கிக் கொண்டேன். அதற்குள் என்னை கடித்துவிட்டன. நல்ல வேளை என் லியோவுக்கு ஒன்றும் ஆகாததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.