காதலர் தினத்தை நடிகை ராஷ்மிகா யாருடன் கொண்டாடியுள்ளார் தெரியுமா..? வைரல் வீடியோ இதோ.!
இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டு அன்பை பரிமாறி கொள்வார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது செல்லப்பிராணியுடன் காதலர் தினத்தை கொண்டாடி அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வீடியோவில் ராஷ்மிகாவுடன் அவருடைய செல்லப்பிராணி துள்ளி துள்ளி விளையாடுகிறது.
View this post on Instagram
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் அன்பர்களே உங்களுக்கு எங்களிடமிருந்து காதலர் தின வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். அவர் செல்லப்பிராணியுடன் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தின் 2-வது பாகத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.