ஆஸ்கர் கம்பெனி ஏன் ஊத்திகிச்சு தெரியுமா? உண்மையை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

Bayilvan Ranganathan

விநியோகஸ்தராக இருந்த வி. ரவிச்சந்திரன் ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்தார். முதல் திரைப்படமே விஜய் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தை தான் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பூவெல்லாம் உன் வாசம், ரமணா, தென்றல், அன்னியன், மருதமலை, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆனந்த தாண்டவம், வேலாயுதம், ஐ, வல்லினம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்கள் . இதில் சில படங்கள் வெற்றி அடைந்தாலும் சில படங்கள் தோல்வியையும் சந்தித்தது. முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வந்து இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே எந்த படங்களையும் தயாரிக்காமல் இருக்கிறது.

கடைசியாக அவர்கள் தயாரித்த இரண்டு திரைப்படங்கள் சரியாக போகாத காரணத்தால்  ஆஸ்கார்  நிறுவனம் கடனில் மூழ்கி போய்விட்டதாம். அந்த சமயம் ஆஸ்கர் நிறுவனம் பெரிய பெரிய படங்களை தயாரித்து வந்த நிலையில், ஒருமுறை கூட அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னுடைய முகத்தை வெளி காட்டவே இல்லையாம்.

அவருடைய முகத்தை வெளி காட்டாமலேயே அவருடைய பெயரை போட்டு பல படங்கள் வெற்றிகளை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக இரண்டு திரைப்படங்களை தயாரித்ததனால் சரியான லாபம் நிறுவனத்திற்கு வரவில்லையாம்.  இதன் காரணமாகத்தான் நிறுவனம் கடனில் அப்படியே போக அடுத்ததாக படங்களை தயாரிக்கவில்லையாம்.

எனவே, படங்கள் தோல்வி அடைந்த காரணத்தால் தான் ஆஸ்கார்  நிறுவனம் ஊத்திகிச்சு எனவும் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், கடைசியாக இந்த நிறுவனம் ஜெயம் ரவி நடிப்பில் கடத்த 2015-ஆம் ஆண்டு வெளியான பூலோகம் திரைப்படத்தை தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்