சூர்யா 44 படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

சூர்யா 44 : சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 42-வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வைக்க விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 44 -வது திரைப்படத்தினை ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு என்ன படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து, படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தில் ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்துள்ளார்.
இன்னும் படத்தில் இணையவுள்ள பிரபலங்கள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட உள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே கசிந்து இருக்கிறது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க வைக்க இயக்குனரும், நடிகருமான உறியடி விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
படத்தின் கதையை கேட்டுவிட்டு அவருக்கு ரொம்பவே பிடித்து போக அவரும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஒரு பக்கம் இவர் சூர்யாவுக்கு வில்லனாக நடித்தால் எப்படி செட் ஆகும் என்ற கேள்வி எழுந்தாலும் மற்றோரு பக்கம் இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் இன்னுமே அதிகமாகி இருக்கிறது.
#Suriya44 Update????
– ???????????????????????????? ???????????????????????????????????????????? Said To Be Playing An ???????????????????????????????????????? ????????????????????????#VijayaKumar | #KarthikSubbaraj | #Suriya pic.twitter.com/mqdxy35MjS
— _its_ganesh_here (@its_Ganesh_here) May 29, 2024