நடிகர் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்திற்கான டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும், படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள அவருடைய 62-வது படத்திற்கான இயக்குனர் மற்றும் படம் குறித்த விவரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது அந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார்.
இவர் இதற்கு முன்பு சிந்துபாத், பண்ணையாரும் பத்மினியும், சித்தா ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இதில் அவர் சித்தார்த்தை வைத்து இயக்கிய சித்தா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்ரமின் 62-வது படத்தை இயக்குகிறார்.
தற்காலிகமாக சியான் 62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் விக்ரமை வைத்து இருமுகன், சாமி 2 ஆகிய படங்களை தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதற்கிடையில், கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…