தங்கலான் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? உண்மையை உடைத்த பா.ரஞ்சித்!!
தங்கலான் : விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் மும்மரமாக நடைபெற தொடங்கிவிட்டது.
அதன் ஒரு பகுதியாக படத்தின் பிரபலங்கள் அனைவரும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” பூ படத்தில் இருந்தே நான் பார்வதி நடிப்பை பார்த்து கொண்டு இருக்கிறேன். அந்த படம் மட்டுமின்றி அடுத்ததாக நான் பல படங்கள் பார்த்து இருக்கிறேன். அந்த படங்களை எல்லாம் பார்த்து தான் நான் இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தேன்.
நிறைய முறை நான் அவருடைய நடிப்பை பார்த்து என்னுடைய படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால், அது முடியாமல் போனது. இந்த முறை இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க சரியானகதாபாத்திரமும் வாய்ப்பும் கிடைத்தது. அவரை படத்தில் நடிக்க வைத்தேன். விக்ரம் மாதிரி நடிக்க ஒரு ஆள் படத்தில் இருக்கிறார் என்றால் அவருக்கு இணையாக நடிக்க வைக்க ஒரு நடிகை வேண்டும் என முடிவு செய்தேன்.
பார்வதியை படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தது போல, ராதிகா ஆப்தேவும் நடிக்க வைக்க யோசித்தேன். அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே, அவரையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். பின் கடைசியில் படத்திற்கு பார்வதி செட் ஆகிவிட்டார்” எனவும் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.