Ghilli : கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தவர் விக்ரம் தான்.
விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம் என்றால் கில்லி படத்தை கூறலாம். கில்லி படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் ஆன பலர் இருக்கிறார்கள். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் ஒக்கடு. இந்த படத்தை தான் தமிழில் இயக்குனர் தரணி விஜய்யை வைத்து ரீமேக் செய்தார். தெலுங்கை போல தமிழிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.
இந்த கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி கணேஷ், மயில்சாமி, ஆடுகளம் முருகதாஸ், கராத்தே ராஜா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
அந்த சமயம் 50 கோடி வசூல் செய்தது என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை. எனவே, படம் அந்த அளவிற்கு அருமையாக இருந்த காரணத்தால் தான் இந்த அளவிற்கு வெற்றிபெற்று இருக்கிறது. அப்படியான ரசிகர்களுக்காகவே படம் மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. எனவே, படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கில்லி படத்தில் விஜய்யை தவிர வேறு எந்த ஹீரோவாவது நடித்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்ததே விஜய் இல்லையாம். முதன் முதலாக படத்தின் கதையை விக்ரமிடம் தான் சரண் கூறினாராம். ஆனால், விக்ரம் அந்த சமயம் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்த காரணத்தால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். அதன் பிறகு தான் படத்தின் கதையை விஜயிடம் இயக்குனர் சரண் கூறினாராம். விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தாராம்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…