Sigappu Rojakkal : சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
இயக்குனர் இமயம் பாரதி ராஜா இயக்கத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக்கரசி, பாக்யராஜ், ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முதலில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிக்கவிருந்தது நடிகர் சிவக்குமார் தானாம். முதலில் படத்தின் கதையை இயக்குனர் பாரதி ராஜா அவரிடம் கூறினாராம். கதையை கேட்டு அதிர்ந்து போன சிவகுமார் கதை நன்றாக இருக்கிறது எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது என இயக்குனர் பாரதிராஜாவிடம் கூறினாராம்.
பிறகு இந்த கதை நன்றாக இருக்கிறது ஆனால், நான் நடித்தால் நன்றாக இருக்காது. எனக்கு இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்காது என கூறி நிகாரித்துவிட்டாராம். பிறகு சிவக்குமார் இப்படி சொன்னதை பார்த்து பாரதி ராஜா சற்று அதிர்ச்சியாகிவிட்டாராம். இதனால் தான் சிவக்குமார் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்கவில்லையாம். இந்த தகவலை அவரே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார்.
சிவக்குமார் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்த நிலையில், பிறகு பாரதி ராஜா கமல்ஹாசனிடம் கதையை கூறினாராம். கமல்ஹாசனுக்கு கதை மிகவும் பிடித்துப்போக நான் நடிக்கிறேன் என சம்மதம் தெரிவித்துவிட்டு நடித்தாராம். படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகி வசூலை குவித்தது.
பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்யும் வில்லனாக நடிகர் கமல்ஹாசன் முத்து திலீப் என இரண்டு கதாபாத்திரங்களாக நடித்திருப்பார். அந்த சமயம் பார்க்கும்போதே படம் மிகவும் த்ரில்லராக இருக்கும். அந்த அளவிற்கு ஒரு தரமான படத்தை இயக்குனர் இமயம் பாரதி ராஜா கொடுத்திருந்தார். தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல படங்கள் இருக்கிறது அந்த பட்டியலில் இந்த படத்திற்கும் எப்போதும் இடம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.