GOAT படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஆடவிருந்தது யார் தெரியுமா?
GOAT படத்தில் இடம்பெற்றிருந்த மட்ட பாடலுக்கு த்ரிஷாவுக்கு பதில் நடிகை ஸ்ரீலீலா தான் நடனம் ஆடவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : GOAT படத்தில் சர்ப்ரைஸ்களுக்கு பஞ்சமே இருக்காத அளவுக்கு பல விஷயங்களை வெங்கட் பிரபு வைத்திருக்கிறார். அதில் முக்கியமான சர்ப்ரைஸ் என்றால் நடிகரை த்ரிஷாவை ஒரு பாடலில் , நடனம் ஆட வைத்திருப்பார். இதற்கு முன்பு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்த படங்களின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.
எனவே, இவர்களுடைய கூட்டணியில் மீண்டும் ஒரு பாடல் அதுவும் தரலோக்கலாக இருந்தால் நன்றாக இருக்கும் என திட்டமிட்டு GOAT படத்தின் மட்ட பாடலில் த்ரிஷாவை வெங்கட் பிரபு விஜய்யுடன் நடனமாட வைத்திருக்கிறார். மஞ்சள் நிற சேலையில், அவர் விஜய்யுடன் ஆட திரையரங்கே அதிர செய்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு செம குத்து நடனம் ஆடியுள்ளார்.
இந்த நிலையில், அந்த பாடலில் முதலில் ஆட விருந்தது நடிகை த்ரிஷா இல்லை எனவும் வேறொரு நடிகை தான் ஆடவிருந்தார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை, குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீலீலா தான். அந்த படத்தில் அவர் Kurchi Madathapetti என்ற பாடலுக்கு நடனமாடியது அவரை எங்கயோ கொண்டு சென்றது.
எனவே, அவர் விஜய்யுடன் ஒரு பாடலில் நடனம் ஆடினால் பயங்கரமாக இருக்கும் என திட்டமிட்டு GOAT படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், அறிமுகம் ஆனால், ஹீரோயினாக நடித்து அறிமுகமானால் தான் சரியாக இருக்கும். ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் தொடர்ச்சியாக அதே போல தான் வாய்ப்பு வரும் என யோசித்தாராம்.
இறுதியாக நன்றாக யோசித்து ஸ்ரீலீலா வேதனையுடன் நான் ஆடவில்லை என மறுத்துவிட்டாராம். அதன்பிறகு தான் த்ரிஷாவை ஆட வைக்கலாம் என யோசனை வந்து அவரை ஆட வைத்திருக்கிறார்கள். ஒரு வேலை மட்ட பாடலில் த்ரிஷாவுக்கு பதில் ஸ்ரீலீலா ஆடியிருந்தால் அது வேறுமாதிரி அருமையாக இருந்திருக்கும் என தெரிவித்து வருகிறார்கள்.