ராயன் படத்தை முதலில் இயக்கவிருந்தது யார் தெரியுமா? படத்துக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதையா?
ராயன் : ஒவ்வொரு நடிகருக்கும் பெரிய ஆசையாக இருப்பது என்றால் தங்களுடைய 50-வது படம் மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கவேண்டும் என்பது தான். அந்த வரிசையில் தனுஷிற்கு அவருடைய 50-வது படமான ராயன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தினை அவரே இயக்கியும் இருக்கிறார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தினை முதலில் இயக்கவிருந்தவர் குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படத்தினை இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கவிருந்தாராம். படத்தின் கதையை முன்னதாகவே தனுஷ் எழுதி வைத்துவிட்டாராம். அந்த சமயம் செல்வராகவன் இயக்கி இருந்த ஒரு படம் சரியாக போகவில்லை என்ற காரணத்தால் ரொம்பவே சோகத்தில் இருந்தாராம்.
அந்த சமயம் தனுஷ் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கிட்ட தனுஷ் ராயன் படத்தின் கதையை பற்றி சொன்னாராம். சொல்விட்டு அண்ணனுக்காக இந்த படத்தை செய்யவேண்டும் என்று கூறினாராம். ஆனால், அந்த சமயம் தனுஷ் கர்ணன் படத்தில் பிசியாக இருந்த காரணத்தால் ராயன் படத்துக்கு சரியான கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.
அதன் பிறகு கலைப்புலி தாணு இந்த படத்தை இப்போது வைத்துவிட்டு பிறகு கூட நாம் தயாரிக்கலாம். முதலில் நீங்கள் கர்ணன் படத்தில் நடித்து முடியுங்கள் என்று கூறிவிட்டாராம். பிறகு அடுத்ததாக தனுஷ் தொடர்ச்சியாக வேறு வேறு படங்களில் நடிக்க கவனம் செலுத்த ராயன் படத்தில் நடிக்க முடியாமல் இருந்தது.
இதன் பிறகு தான் ராயன் படத்தினை நம்மளே இயக்கி நம்மளே நடிப்போம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் தனுஷ். இதற்கிடையில் தனது அண்ணன் செல்வராகவனுக்காக நானே வருவேன் படத்திலும் நடித்து கொடுத்தார். ராயன் படத்தினை முதலில் இயக்கவிருந்த தகவலை கலைப்புலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ராயன் படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.