Throwback சினிமாவில் இருக்கும் பல நடிகர்களின் சிறிய வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் அடடே இவுங்களா இது? என ஆச்சரியப்படுவது உண்டு. அப்படி தான் தற்போது சிறிய வயதில் நடிகர் சத்யராஜுடன் ஒரு நடிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சத்யராஜுடன் இருக்கும் அந்த குட்டி பையன் யார் என்று பலரும் சீக்கிரமாகவே கண்டுபிடித்து இருப்பீர்கள். அந்த பையன் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருக்கும் பஹத் பாசில் தான். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் எம்மாடியோ பஹத் பாசிலா இது? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தன்னுடைய கண்களிலே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் எந்த கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் சரி தனது அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார் என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு வில்லனாகவும் சரி, ஹீரோவாகவும் சரி மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என சமீபகாலமாக கலக்கி கொண்டு இருக்கிறார்.
தமிழில் கடைசியாக மாமன்னன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜூன்க்கு வில்லனாக புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். அதனைப்போலவே, தமிழில் மீண்டும் வடிவேலுவுடன் மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…