பலே கில்லாடி லோகேஷ் நீங்க…’தலைவர் 171′ திரைப்படத்தில் வில்லன் யார் தெரியுமா?

Lokesh Kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தாற்காலியமாக “தலைவர் 171” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இயக்குனர்டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், தற்போது தலைவர் 171 படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுடனுன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஒரு நம்ப முடியாத தகவல்களாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று சொன்னதும், அவர் தான் வில்லனாக நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருக்கிறது. இப்பொது, இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க ஜீவன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘திருட்டு பயலே’, ‘நான் அவன் இல்லை’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…

முந்தைய காலகட்டத்தில் நடிகர் ஜீவன் விறுவிறுப்பாக நடித்து வந்தாலும், அவர் தீவிர ஜோசியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். எப்போ பாத்தாலும் படப்பிடிப்பில் ஜோசியம் பார்ப்பாராம், அது மட்டும் இல்லாமல் எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை ஜோசியம் பார்த்து தான் முடிவு செய்வாராம். கடைசியில் ஜோசியத்தால் தனது படவாய்ப்புகளையும் இழந்து விட்டார்.

ஞானவேல் ராஜா பாவம் சுமக்காதீர்கள்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சேரன்!

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக நடிப்பில் இருந்து விலகி இருந்த நடிக்க ஜீவன் தற்போது, மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஆனால், எப்படி தான் ஜீவனை லோகேஷ் பிடித்தார் என்றே தெரியவில்லை. எப்பொழுதும் அவர் இயக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரம் கண்டிப்பாக பேசக்கூடியதாக இருக்கும். அவ்வாறு, ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமாக யோசிக்கும் லோகேஷ் இந்த படத்திற்கு அவரை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்