பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் எவ்வளவு நடந்து வருகிறதோ அதே அளவுக்கு கலகலப்பான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. குறிப்பாக வீட்டிற்குள் இருக்கும் கூல் சுரேஷ் எதாவது செய்து மக்களை சிரிக்க வைத்தும் வருகிறார்.அதைப்போல , கானா பாலா விக்ரம் உள்ளிட்டோரும் தங்களுடைய பங்கிற்கு கவுண்டர் கொடுத்து சிரிக்க வைத்து வருகிறார்கள்.
அதிலும், குறிப்பாக விக்ரம் தான் தான் டைட்டில் வின்னர் என்பது போல பேசியது மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பலரும் அதனை மீம் போட்டு கலாய்த்து வந்தார்கள். இந்த நிலையில், அதனை தொடர்ந்து இன்றும் டைட்டில் வின்னர் விக்ரம் தான் என சரவணன் பங்கமாக காலைத்துள்ளார்.
இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் வேறு வேறு போட்டியாளர்களுடைய கெட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பாக விஷ்ணு விஜய் வேடத்தில் மாயா அக்ஷயா வேடத்தில் தினேஷ் ரவினா வேடத்தில் சரவணா என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் அனைவரும் ஒவ்வொரு கெட்டப்பில் இருப்பதால் இன்று நடைபெறும் எபிசோடின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ப்ரோமோவில் அனைவரும் சிரிக்க வைக்கும் படி ஒரு சம்பவமும் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், பூர்ணிமா பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? என்பது போல கேட்க அதற்கு ரவினா வேடத்தில் இருந்த சரவணா விக்ரம் என கூறினார். இதனால் சக போட்டியாளர்கள் வாய் விட்டு சிரித்தார்கள்.
பொறுக்கி பொறுக்கி…கடும் வாக்குவாதத்தில் தினேஷ்- விஸ்ணு!பிக் பாஸ் வீட்டில் வெடித்த பெரிய சண்டை!
அவர்களை போல பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் மக்களும் உற்சாகம் அடைந்தனர். மேலும், ஒரு பக்கம் இப்படியான காமெடியான நிகழ்வுகள் நடந்து வந்தாலும் ஒரு பக்கம் சண்டைகள் மிகவும் பயங்கரமாக நடந்து வருகிறது. குறிப்பாக நேற்று தினேஷ் விஸ்ணுவிடம் பெரிய வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…