இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2109-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.
ஒரே நாள் இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இப்படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு தரமான பின்னணி இசையை இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வழங்கியிருப்பார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. அதற்கான பணிகள் ஒருபக்கம் விறு விறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், கைதி படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ். கைதி படத்தின் அடுத்த பாகத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்த தகவலை அவரே சமீபத்திய ஒரு பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…