நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள 68 வது திரைப்படத்திற்கான தகவல்கள் கடந்து சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜயின் 68வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்குவதாகவும், அந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கம் படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால் தற்போது வெங்கட் பிரபு விஜய் வைத்து இயக்கும் அவருடைய 68-வது திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியவும் வெளியாகி உள்ளது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய்-யுவன் கூட்டணி இணையப்போகிறது என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏற்கனவே முன்னதாக ஒரு விழாவில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு அனிருத் உடன் வேலை செய்ய தனக்கு ஆசையாக இருப்பதாகவும் அவருடைய இசை தனக்கு பிடித்ததாகவும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…