சைலண்டாக முடிந்த மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை : மேகா ஆகாஷ் தனது காதலர் சாய் விஷ்ணுவுடன் நேற்று (ஆகஸ்ட் 22ம் தேதி) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், அவர் தனது திருமணம் செய்தி குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
ஆனால், தற்போது அவரது திருமணம் குறித்த கிசுகிசுக்கள் உண்மையாகிவிட்டது. ஆம், நடிகை மேகா ஆகாஷூக்கு காதலர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. அதனை உறுதி செய்யும் வகையில்மேகா ஆகாஷ், நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், தனது ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொது, அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறிவருகின்றனர். மேகாவும் விஷ்ணுவும் சில காலமாக டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரை, வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்த நிலையில், இருதியாக தங்கள் காதல் உறவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாப்பிள்ளை யார் தெரியுமா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (மக்களவை) மத்திய – மாநில முன்னாள் அமைச்சரின் மகனான சாய் விஷ்னுவை தான், மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
எப்போது திருமணம்
செப்டம்பர் மாதம் 14-ந் தேதி மாலை 6.00 மணியளவில் திருமண வரவேற்பும், செப்டம்பர் 15-ந் தேதி காலை 10.45 11.45 மணிக்கு திருமணமும், சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மஹாலில் நடைபெற உள்ளது.
மேகா ஆகாஷ்
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். கடைசியாக நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நாடிருந்தார். அவருக்கு தற்போது கையிருப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன.
View this post on Instagram