குஷ்பு மேலே சாய்ந்திருக்கும் பர்த்டே பாய் யார் தெரியுமா.?

Venkatesh - Khushbu

தமிழ் திரைப்பட நடிகையும் மற்றும் அரசியல்வாதியுமான குஷ்பு, 1980-ல் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் நடித்த காலகட்டங்களில் முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமாக வலம் வந்தார். இந்த நிலையில், அவர் இளமை காலத்தில் நடித்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பு மீது சாய்ந்திருக்கும் நபர் யார் என்று பார்த்தால், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி தான். ஆம், நடிகர் டகுபதி வெங்கடேஷ் இன்று தனது 63 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். 37 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வயதிலும் திரை பிரபலமாக ஜொலித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றன. தற்போது, படப்பிடிப்பில் அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட நடிகை குஷ்பு, தனது பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.

இயக்குனர் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் டகுபதி ஹீரோவாக நடித்த கலியுக பாண்டவுலு என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான குஷ்பு, இந்த படத்துக்கு பிறகு வெங்கடேஷ் டகுபதியுடன் இணைந்து ‘பாரதம்லோ அர்ஜுனுடு’ மற்றும் ‘திரிமுர்துலு’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.

தளபதி 68 படத்தில் இணைந்த சுந்தர் சி பட நடிகை! யார் தெரியுமா?

நடிகர் வெங்கடேஷ் மற்றும் நடிகை குஷ்புவின் முதல் கூட்டணியான கலியுக பாண்டவுலு தெலுங்கு சினிமாவில் வெற்றி பெற்றது. 1990 களில் தெலுங்குத் துறையில் இருந்து சற்று விலகிய குஷ்பு, பின்னர் தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்