Categories: சினிமா

Thalapathy68: மங்களகரமாக நடந்து முடிந்த ‘தளபதி 68’ பூஜை! படத்துல யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

Published by
கெளதம்

விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் மங்களகரமாக நடந்து முடிந்துள்ளது. பூஜை விழாவில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் கலந்து கொன்டுள்ளனர். 

தளபதி விஜய் அடுத்த நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் மிகப் பெரிய அளவில் தயாரிக்கிறது.

படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது. இந்நிலையில், இந்த படத்துக்கான பூஜை இன்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இந்த பூஜை விழாவில், விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட படத்தின் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் எதிர்பாராத சிலர் கலந்து கொண்டனர், அவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த தகவலின் படி, நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி  ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யின் அப்பா கதாபாத்திரத்திற்கு சினேகாவும், மகன் கதாபாத்திரத்திற்கு மீனாட்சி சவுத்ரி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு குடும்ப திரைப்படம் என்பதால், இந்த நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, விஜய் ‘வாரிசு’ என்ற குடும்ப படத்தை வழங்கியதால், மறுபடியும் குடும்ப படமா? என்று ஒரு சில ரசிகர்கள் மனதில் கேள்வி எழுப்ப வைத்திருந்தாலும், இது வெங்கட் பிரபு திரைப்படம் என்பதால் வரும் நாட்களில் வெளியாகும் அப்டேட்டை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இன்று படத்தின் பூஜை முடிந்த நிலையில், நாளை இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இந்த படத்திற்கான 2 பாடல்கள் முடிந்துவிட்டதாகவும், ‘லியோ’ படம் வெளியான பிறகு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago