பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போறாங்க தெரியுமா? 

BIGG BOSS 8 TAMIL CONTESTANTS LIST

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்றாலே மக்களுக்கும் சரி மீம் கிரியட்டர்களுக்கும் சரி ஒரு பொழுதுபோக்காக அமைந்துவிடும். ஏற்கனவே, 7 சீசன் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பக்காக இருந்து வருகிறது.

நம்பதக்க சினிமாவட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த சீசன் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கவில்லை என கமல்ஹாசன் அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி 8-வது சீசனை யார் தொகுத்து வழங்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஒரு பக்கம் விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோருடைய பெயர்கள் வைரலாகி வரும் நிலையில், மற்றோரு பக்கம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்களுடைய பெயர்கள் பற்றிய விவரங்களும் பரவி வருகிறது.

அந்த வகையில், லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் 8 சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளியான பெயர்களை பற்றி பார்க்கலாம்.

  • யூடியூபர் TTF வாசன்
  • ஷாலின் சோயா ( குக் வித் கோமாளி பிரபம்) 
  • ப்ரீத்தி முகுந்தன் (ஸ்டார் ஹீரோயின்)
  • ஜாக்கி ஆனந்தி (RJ)
  • யூடியூபர் வில்ஸ்பட்
  • நடிகர் ரியாஸ் கான்
  • நடிகை பூனம் பஜ்வா
  • சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் பிரபலம்)
  • நடிகர் ஜெகன்
  • நடிகர் ரஞ்சித்
  • குரேஷி (குக் வித் கோமாளி) 
  • அருண் பிரசாந்த் (பாரதி கண்ணம்மா)
  • அமலா ஷாஜி (யூடியூபர்)

இவர்களில், டிஎஃப்எஃப் வாசன், அமலா ஷாஜி, ஆகியோர் சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்டிருந்தாலும், ஏற்கனவே அவர்கள் ட்ரோல் செய்யப்பட்டவர்கள். எனவே, இவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறார்களா என்கிற தகவலைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும், கண்டிப்பாக இவர்கள் கலந்துகொண்டால் ‘மீம்ஸ்’ கிரியேட்டர்களுக்கு கண்டடெண்டுக்கு பஞ்சமே இருக்காது எனக் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir