Categories: சினிமா

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொண்டுள்ளார்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட் இதோ!

Published by
பால முருகன்

பிக் பாஸ் தமிழ் 7 -வது சீசன்  நிகழ்ச்சி இன்று முதல் (அக்டோபர் 1 ) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வழக்கமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இன்று முதல் நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கலந்துகொள்ளும் பிரபலங்கள் 

  • கூல் சுரேஷ்
  • பாடகர் யுகேந்திரன் (மலேசியா வாசுதேவனின் மகன்)
  • நடிகர் பிரதீப் ஆண்டனி (டாடா, வாழ்)
  • சீரியல் நடிகர் விஷ்ணு
  • நடிகை மாயா கிருஷ்ணன் (விக்ரம்)
  • சீரியல் நடிகை ரவீனா தாஹா
  • நடிகர் சரவணா (பாண்டியன் ஸ்டோர்ஸ் )
  • ஜோவிகா (வனிதா விஜய்குமார் மகள்)
  • அனன்யா ராவ் ( மாடல் அழகி)
  • ஐஷு (டான்சர் அமீரின் சகோதரி)
  • நடிகை அக்ஷயா உதயகுமார் (லவ் டுடே)
  • எழுத்தாளர் பவா செல்லதுரை
  • நடிகை விசித்ரா
  • ராப்பர் நிக்சன்
  • பூர்ணிமா ரவி (யூடியூபர்)
  • சீரியல் நடிகை வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா)
  • விஜய் வர்மா (டான்ஸ் மாஸ்டர்)
  • மணி சந்திரா (டான்ஸ் மாஸ்டர்)

இந்த பிரபலங்கள் அனைவரும் இந்த பிக் பாஸ் சீசன் 7-வது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக வெளியான செய்தியை பார்த்த பலரும் இந்த முறை பிக் பாஸ் வேற லெவலில் இருக்கப்போகிறது என கூறிவருகிறார்கள்.

இரண்டு வீடு 

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு இருக்கும் அந்த வீட்டிற்கு என்ன சண்டையெலாம் நடக்கிறது பிரபலங்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த முறை சற்று வித்தியாசமாக வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் கூட கமல்ஹாசன் இதனை பற்றி பேசி இருந்தார். எனவே, தப்பு செய்தால் சரியாக இருக்கும் வீட்டில் இருப்பார்கள் தவறு செய்தால் தண்டனையாக மற்றோரு வீட்டிற்கு அனுப்பபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை எதில் பார்க்கலாம்? 

பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். அதில் பார்க்க தவறினால் நீங்கள் ஹாட்ஸ்டார் மூலமும் பார்க்கலாம். மேலும், ஹாட்ஸ்டார் மூலம் 24 மணி நேரமும் வீட்டிற்குள் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம் அதற்கான நேரடி ஒளிபரப்பும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

49 minutes ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

3 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

3 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

4 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

4 hours ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

4 hours ago