Simran : பிதாமகன் படத்தில் ஆடியது தான் நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆடிய பாடல் என்று சிம்ரன் கூறியுள்ளார்.
நடிகை சிம்ரன் எப்படியா பட்ட பாடல்களாக இருந்தாலும் தன்னுடைய அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விடுவார் என்றே சொல்லலாம். இதுவரை அவர் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தான், ஆல்தோட்ட பூபதி, ஆகிய பாடல்கள் எல்லாம் காலங்கள் கடந்தும் இன்னும் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது.
இந்த பாடல்களில் எல்லாம் நடிகை சிம்ரன் நடனம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. இப்படியான பல பாடல்களில் சிம்ரன் ஆடி இருந்தாலும் சிம்ரன் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆடிய பாடல் எது என்று தெரியுமா? அவர் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆடிய பாடல் பிதாமகன் படத்தில் இடம்பெற்ற பாடலில் தானாம்.
பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் ஆகியோர் எல்லாம் இணைந்து நடித்து இருந்த பிதாமகன் படத்தில் இடம்பெற்று இருந்த ஒரு பாடலில் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடி இருப்பார். இந்த பாடலின் கடைசி காட்சியில் விக்ரமுடன் சிம்ரன் நடனம் ஆடும் போது மிகவும் கஷ்டப்பட்டாராம். இதற்கு முன்பு வரை சிம்ரன் வேறு மாதிரியான ஜானர்களில் நடனம் ஆடி இருக்கிறார்.
முதன் முதலாக தர லோக்கலாக அந்த பாடலில் நடனம் ஆட சிம்ரன் ரொம்பவே கஷ்டப்பட்டாராம். அந்த பாடல் முழுவதும் ஆடுவதற்கு சிம்ரனுக்கு பிடித்து இருந்ததாம் ஆனாலும் கடைசியாக தக தகவென ஆடவ என்ற வரிகள் வரும் போது எப்படி ஆடப்போகிறோம் என்று யோசித்து கொண்டே கஷ்டப்பட்டு ஆடினாராம். இந்த தகவலை சிம்ரன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…
சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்=…
உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக…