கதையை கேட்காமல் இளையராஜா மியூசிக் போட்ட படம்? பாடல்களோ சூப்பர் ஹிட்டு!
READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!
காலங்கள் கடந்தாலும் சரி அவருடைய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இன்றயை காலகட்டத்திலும் கூட ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. இளையராஜா ஆரம்ப காலத்தில் எல்லாம் இசையமைக்க ஒப்பந்தம் ஆகும் படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு படத்தை விட பாடல்கள் மீது அதிகமாக இருந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களை வைத்து படங்களே வெற்றி அடைந்து இருக்கு என்று கூட பல படங்களை நாம் சொல்லலாம்.
பொதுவாகவே, ஒரு படங்களுக்கு இசையமைப்பாளர்கள் இசையமைக்க ஒப்பந்தம் ஆனால் அந்த படத்தின் கதையை கேட்ட பிறகு தான் இசையமைக்க தொடங்குவார்கள். இசையமைப்பாளர் இளையராஜாவும் அப்படி தான். ஆனால், ஒரே ஒரு படத்தின் கதையை கூட கேட்காமல் அந்த படத்தின் பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளார். அவர் இசையமைத்து கொடுத்த அந்த பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகி படத்தினுடன் பொருந்தியது என்று கூட கூறலாம்.
read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?
அந்த திரைப்படம் வேறு எதுவும் இல்லை கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் தான். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. அந்த அளவிற்கு படத்தின் வெற்றிக்கு பாதி காரணம் கதை என்றாலும் மற்றோரு காரணம் பாடல் என்று கூறலாம். அந்த அளவிற்கு தரமான பாடல்களை இளையராஜா கொடுத்திருப்பார். ஆனால், இந்த படத்தின் பாடல்களை இசையமைக்கும்போது இளையராஜா கதையை கூட கேட்காமல் தான் இசையமைத்தாராம்.
இந்த தகவலை இயக்குனர் கங்கை அமரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இயக்குனர் கங்கை அமரன் ” முதலில் நான் இளையராஜா அண்ணனிடம் கரகாட்டக்காரன் என்ற ஒரு திரைப்படத்தை செய்ய உள்ளேன் என்று கூறினேன். அதற்கு என்னடா இது கரகாட்டக்காரன் என்று பேசினார். பிறகு அண்ணா அதெல்லாம் இருக்கட்டும் எனக்காக கரகாட்டக்காரர்களுக்கு நடனமாடி செல்வது போல ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டேன்.
read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?
அதற்கு அவர் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலை போட்டுக் கொடுத்தார். அதன் பிறகு ஒரு மெலடி பாடல் கேட்டேன் அதற்கு அவர் ஒரு மெலடி பாடலும் போட்டுக் கொடுத்தார்.அதன் பிறகு தீயில் மிதித்துக் கொண்டு செல்வது போல ஒரு பாடல் வேண்டும் என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவரும் மற்றொரு பாடலும் செய்து கொடுத்தார். இந்த மாதிரி சம்பவங்களை மட்டும் நான் அவரிடம் கூறினேன் அதற்கு அவர் பாடல்களை தரமாக கொடுத்தார்.
அண்ணன் இளையராஜா இதுவரை கதை கேட்காமல் போட்ட முதல் பாடல் அதுதான். அதன் பிறகு படத்தின் பின்னணி இசை சேர்க்கும் பணியில் அண்ணன் இளையராஜா ஈடுபட்டுக் கொண்டிருந்தார் படத்தை முழுவதுமாக பார்த்து விழுந்து விழுந்து சிரித்து அவருக்கு வயிறு வலியை வந்துவிட்டது. அதன் பிறகு தான் இசையமைக்க தொடங்கினார். இரண்டே நாட்களில் படத்தின் பின்னணி இசை வேலைகளை முடித்து தரமான படத்தை எங்கள் கையில் கொடுத்தார்’ எனவும் கங்கை அமரன் கூறியுள்ளார்.