விக்ரம் படத்தின் ” OST” எப்போது வெளியாகிறது தெரியுமா.? அனிருத் கொடுத்த அப்டேட்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 430 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து படம் நாளை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்களோ, அதை அளவிற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் பின்னணி இசையில் பூந்து விளையாடி இருப்பார். குறிப்பாக, விஜய் சேதுபதி வரும் அறிமுக காட்சி, சூர்யா வரும் காட்சிகளில் பின்னணி இசையாலே மெய் சிலிர்க்க வைத்திருப்பர் அனிருத்.
இந்த நிலையில், படத்தின் OST எப்போது வெளியாகும் ரிங்க் டோனை மாற்ற காத்திருக்கும் ரசிகர்களுக்கு அனிருத் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி, விக்ரம் படத்தின் OST ஜங்க் பாக்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.
#VikramOST today at 6pm ????@ikamalhaasan @Dir_Lokesh @RKFI @SonyMusicSouth @turmericmediaTM
— Anirudh Ravichander (@anirudhofficial) July 7, 2022