கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடிக்க உள்ள திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.
இதையும் படியுங்களேன்- நீல நிற உடையில் கவர்ச்சி.! வைரலாகும் ஷெரின் பேபியின் புகைப்படங்கள்.!
இந்த படத்தில் நடித்த பிறகு தான் தனுஷ் அடுத்த படங்களில் நடிக்க தொடங்குவாராம். அதுவரை எந்த படத்தில் நடிக்கவே மாட்டாராம். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தமிழ்நடையும் தாண்டி பல மாநிலங்களிலும் நடைபெறஉள்ளதாகவும் படத்தில் தனுஷ் பல வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது. இதில் திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.