நடிகை த்ரிஷாவின் கர்ஜனை படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சாமி, கில்லி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா இயக்குனர் சுரேந்தர் பாபு இயக்கத்தில் ‘கர்ஜனை’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்தது. இப்படம் திரைக்கு வருவதற்கு தாமதமாகி கொண்டே இருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரையிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.