இந்தியன் 2 திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா..? சூப்பர் தகவல் இதோ.!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், குரு சோமசுந்தரம், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், தீபா சங்கர், குல்ஷன் குரோவர், பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி, ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தீபாவளி என்று திரைக்கு கொண்டுவர படக்குழு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி கொண்டு இருந்தது. ஆனால் அதற்குள் படம் முழுவதுமாக தயாராக இருக்காது. ஷங்கர் இந்த கோடையில் இந்தியன் 2 ஐ முடிப்பார், ஆனால் அவர் கேம் சேஞ்சரின் படப்பிடிப்பையும் செய்கிறார்.
கேம் சேஞ்சர் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும். இந்தியன் 2 ஆனது போஸ்ட் புரொடக்ஷன் திட்டத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் இரண்டின் அட்டவணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தீபாவளித் தேதி இப்போது சாத்தியமில்லை. எனவே இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.