Premalu OTT release: தள்ளிப் போன பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்துடன் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மலையாள திரைப்படம் பிரேமாலு. காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் உலக முழுவதும் ரூ.134 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த பிளாக்பஸ்டர் படத்தில், நஸ்லன் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் ஷ்யாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கிய இந்த படத்தை பாவனா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் மலையாளத்தை தாண்டி தெலுங்கில் சக்கை போடு போட்டது. இதனால், இதன் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளி போனது.
இப்பொழுது, இந்த திரைப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இதுவரை அதிக வசூல் செய்த தெலுங்கு டப்பிங் செய்யப்பட்ட மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ‘Disney Plus Hotstar‘ பெற்றுள்ளது. அதன்படி, இப்படம் வருகின்ற 12-ம் தேதி ஓடிடியில் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…