pushpa 2 [File Image]
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
ஆனால், படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் எப்போது வெளியானாலும் கண்டிப்பாக வசூலில் ஒரு கலக்கு கலக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனென்றால், ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது.
தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. படம் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாக 371 கோடி வரை வசூல் செய்து ஹிட் ஆனது. எனவே அதனை மிஞ்சும் அளவிற்கு கண்டிப்பாக புஷ்பா 2 வசூலில் கலக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…