மெய்யழகன் படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் அக்டோபர் 27-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : சினிமாவை பொறுத்த அளவில் சில படங்கள் உணர்வுகளை அப்படியே எடுத்துக்காட்டும் வகையில் இருக்கும். அந்த படங்கள் திரையரங்குகளில் வெளியான சமயத்தில் ஓடிடியில் வெளியான பிறகு, இந்த படத்தைத் தவறவிட்டுவிட்டோமே என்று யோசிக்க வைத்துவிடும்.
அப்படி தான் மாமன் -மச்சான் உறவை அப்படியே அழகாக நம்மளுக்கு எடுத்துக்காட்டிய கார்த்தி நடிப்பில் வெளியான “மெய்யழகன்” படம் கூட ஓடிடியில் வெளியாக இருக்கிறது. வெளியான பிறகு கண்டிப்பாகப் படம் பார்த்துவிட்டு பலரும் ” இந்த படத்தை ஏன் கொண்டாடவில்லை? ” எனக் கேள்விகளை எழுப்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அளவுக்கு ஒரு கிராமத்தில் நாம் வசித்தால் எப்படி இருக்குமோ அதனைப் படம் பார்க்கும்போதே அந்த உணர்வு தெரியும். அத்துடன், மாமன் -மச்சான் உறவு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த காலத்தில் இவ்வளவு அழகாகப் படத்தின் மூலம் யாரும் சொல்லியிருக்க முடியாது. அந்த அளவுக்கு இயக்குநர் படத்தின் மூலம் அதனைச் சிறப்பாக சி.பிரேம் குமார் காட்டியிருந்தார்.
இருப்பினும், படத்திற்குப் பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் எனப் படக்குழு எதிர்பார்த்துப் படத்தைத் திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியானது. இருப்பினும், அந்த அளவுக்குப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தியேட்டரில் பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025