ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று மதியம் ஒரு சிறிய பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களால் அவரை சூழ்ந்தனர். பிறகு அடுத்த திட்டம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அடுத்த ஷூட்டிங் தான்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- 6 மாசத்துக்கு தீவிர ஓய்வு…. மருத்துவர்கள் அறிவுறுத்தல்.! என்ன செய்ய போகிறார் சியான் விக்ரம்..?
அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளதாம். விரைவில் இதனை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும், அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பதாகவும் படக்குழுவினர் முன்னதாகவே சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டனர். விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.